இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது ஜப்பானின் JICA நிறுவனத்தின் உதவியுடன் நிறுவப்படவுள்ளது..
நான்கு வருடங்களுக்குள் இந்தப் பணிகளை முடிப்பதே இலக்கு என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இது தொலைக்காட்சி சமிக்ஞைப் பாதிப்புகளை நீக்கி, தெளிவான பார்வையுடன் நிகழ்ச்சிகளைப் பார்க்க உதவும் எனவும் உலகம் முழுவதிலும் உள்ள விரைவான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்துக்கு ஏற்ப, தேவையற்ற கழிவுகளை அகற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.