பிரிட்டன் எலிசபெத் ராணியின் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் ஆடவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் கையில் அம்பு ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
எலிசபெத் ராணி கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விண்ட சோர் அரண்மனையில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதான ஆடவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜஸ்வந்த் சிங் சயில் என்ற குறித்த சந்தேக நபர் மனநல சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில் 1919 இல் அமிர்தசரஸ் படுகொலைக்கு பழிதீர்க்கும் வகையில் எலிசபெத் ராணியை படுகொலை செய்வது பற்றி எச்சரிக்கை விடுக்கும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.