எரிபொருள் போக்குவரத்து புகையிரத சேவையிலிருந்து நீக்கப்படும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள புகையிரத நிலைய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரிமா மற்றும் ஹோல்சிம் நிறுவனத்தின் சீமெந்து உற்பத்தி பொருட்களுக்கான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரே நேரத்தில் எரிபொருள் போக்குவரத்து முன்னெடுக்கப்பட மாட்டாது என புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.