போராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆகும் போது பொதுவாகவே நத்தார் பண்டிகை அனைவருக்கும் நினைவுக்கு வருகின்றது.
இயேசு நாதர், கடவுளுடைய ஒரே புதல்வராக மானிடப் பிறவியெடுத்து இந்த பூலோகத்தில் அவதரித்தார். இந்த நிகழ்வையே நாம் நத்தார் பண்டிகையாக கொண்டாடுகின்றோம்.
நத்தார் பண்டிகை குறித்து புனித பைபிலில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அவதானிக்கும் போது இயேசு நாதரின் பிறப்பானது எங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இவ்வாறான அதிகாரம் மிக்க நிகழ்வானது, எளிமையான அமைதியான இடமொன்றிலேயே நிகழும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நத்தார் பண்டிகையை கொண்டாடும் போது நாம் இந்த நிலையை பல சந்தர்பங்களில் மறந்து விடுகின்றோம்.
உணவு, உடை , பரிசுப்பொருள் மற்றும் மகிழ்சியை ஏற்படுத்தும் அலங்காரங்கள் குறித்தே எமது அவதானத்தை செலுத்துகின்றோம்.
நாங்கள் இங்கு இருக்கும், ஆட்டுத் தொழுவத்தை மறந்து விடுகின்றோம்.
எனவே, இந்த நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மறந்து விடுகின்றோம்.
இந்த நத்தார் பண்டிகையில் முடியுமானவரை ஏழ்மையான மக்களுக்கு உதவும் ஒரு சந்தர்ப்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.’