சுமார் 13 மில்லியன் மக்களைக் கொண்ட சீனாவின் சியான் நகரத்தில் வசிப்பவர்களுக்கு வீடுகளில் தனித்திருப்பதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கொவிட் தொற்று இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த சட்டம் பிறப்பிக்கப்படடுள்ளதாக குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடிப்படையில் வீட்டுக்கு ஒருவர் மாத்திரமே இரண்டு நாட்களக்கு ஒரு தடைவை எனும் ரீதியில் அத்தியவசியப் பொருள் கொள்வனவிற்காக வீட்டிலிருந்து வெளியேற முடியும் எனவும் குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் சீனாவில் அடுத்த வருடம் பெப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள் இடம்பெறவிருப்பதால் கொவிட் தொற்று பரவல் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.