எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது அனைத்து பொருட்களின் விலைகளை அதிகரப்பதற்கும் சமனானது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விலையேற்றத்தினால் மக்கள் மிகுந்த துன்பங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.