வடகொரியாவின் ஜனாதிபதியின் செயற்பாடுகள் பல்வேறு நாடுகள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் தற்போது அவர் பிறப்பித்துள்ள சிரிப்பதற்கான தடை நாட்டுமக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டில் எவரும் சிரிக்கக் கூடாது என தடை விதித்துள்ளார் வடகொரிய நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங்.
இதனை அடுத்து அந்நாட்டு மக்கள் பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு வடகொரியாவில் உணவிற்கான பஞ்சம் ஏற்பட்டபோது மக்கள் ஒரு வேளை உணவை மாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்நாட்டு சட்டங்கள் குறித்து வெளி உலகிற்கு தெரியாத வண்ணம் பேணி வரும் கிம் ஜோங் சட்டங்களை மீறுவொருக்கு எதிராக கடும் தண்டனைகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.