சர்வதேச நிதி ஒழுக்கத்தை மதிப்பிடும் நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம், இலங்கையில் நீண்ட கால வெளிநாட்டு நாணயங்களை வழங்குபவர்களின் இயல்புநிலை மதிப்பீட்டை CCC இல் இருந்து CC விற்கு குறைத்துள்ளது.
இந்த நிறுவனம் நிதி ஒழுக்கத்தை மேற்பார்வையிடும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
இந்த நிறுவனம் ஒரு நாடு அல்லது நிறுவனத்தின் ஒழுக்கத்தை AAA-AA-A, BBB-BB-B, CCC-CC-C மற்றும் DDD-DD-D என்ற ரீதியில் வகைப்படுத்துகின்றது.
AAA என்பது சிறந்த ஒழுக்கமாகவும் B – உயர் ஒழுக்கமாகவும் C- சாதாரண ஒழுக்கமாகவும் D – திருப்தியற்ற ஒழுக்கமாகவும் மதிப்பிடப்படும்.
இலங்கையின் நிதி ஒழுக்கம் CCC மட்டத்தில் இருந்த நிலையில் சமீபத்திய மதிப்பீட்டின்படி CC ஆக பின்னடைந்துள்ளது.