மாவனல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகத்துறையின் தொழினுட்பப் பிரிவிற்கு முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்டவருமான செய்னுல் ஆப்தீன் சிராஜ் லுதுபி அவர்கள் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுதாபனத்தில் தனது 4 1 வருட தொடர் சேவையின் பின்னர் 2 3 .1 2 .2 ௦ 2 1 அன்று 6 ௦ வயதில் ஒய்வு .

மாவனல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட மற்றும் மாவனல்லை மண்ணிலிருந்து ஊடகத்துறையின் தொழினுட்பப் பிரிவிற்கு முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்டவருமான செய்னுல் ஆப்தீன் சிராஜ் லுதுபி அவர்கள் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுதாபனத்தில் தனது 4 1 வருட தொடர் சேவையின் பின்னர் 2 3 .1 2 .2 ௦ 2 1 அன்று 6 ௦ வயதில் ஒய்வு பெறுகின்றார். இவர் ஒய்வு பெற்ற அதிபரும் முதலாவது வட்டி இல்லா வங்கியின் அமைப்பாளருமான காலம் சென்ற செய்னுள் ஆப்தீன் அவர்களின் மகனாவார். தனது ஆரம்பக் கல்வியை மாவனல்லையில் கற்று பின்பு கம்பளை சாஹிராவில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் 1 9 8 1. ௦ 3 .1 ௦ ஆம் திகதி இலங்கை ஒளிபரப்புக்கூட்டுதபனத்தில் தொழினுட்பவியலாளராகச் சேவையில் சேர்ந்தார். சேவையின் பொழுது பல பிராந்திய நிலையங்களில் சேவை செய்தார் இறுதியாக 1 9 8 7 ஆம் ஆண்டு கந்துரட்ட சேவைக்கு தொழினுட்பவியலாளராக இடமாற்றம் பெற்றார். 2 ௦ ௦ 9 ஆம் ஆண்டு நிலையப்பொறுப்பதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று இன்று வரையில் சேவையாற்றி வருகின்றார். முக்கிய பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. எல்லா இன ஊழியர்களாலும் கண்ணியப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். அது மாத்திரம் அல்லாமல் கந்துரட்ட முஸ்லிம் சேவையின் பொறுப்பாளர் பதவியையும் சுமார் 5 வருடங்கள் சேவை அடிப்படையில் ஏற்று நடாத்தித் தலை நிமிர்ந்து வேலை செய்யக்கூடிய சூழ்நிலையயைக் கலையகத்தில் உருவாக்கினார் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. அது சேவையின் பொற்காலம் என்றே சொல்லலாம்.
“கல்வி கற்கும் காலமாகட்டும் தொழில் செய்யும் காலமாகட்டும் யார் யாரெல்லாம் சந்திக்க; தொடர்புபட நேர்ந்ததோ, அவர் ஏதேனும் எண்ணங்களால், செயல்களால் தவறு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுமாறு  அன்பாகக் கேட்டுக்கொண்டார்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here