இந்திய அரசாங்கத்தின் குற்ற ஆவணக் காப்பகத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின் பிரகாரம் கடந்த ஆண்டு 22,372 இந்திய இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரவியல் அடிப்படையில் ஒரு நாளுக்கு 61 மரணங்கள் அல்லது ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய அரசாங்கத்தின் குற்ற ஆவணக் காப்பகத்தின் தொழில் ரீதியான தற்கொலைகள் தரவுகள் பிரகாரம் 1997 ஆம் ஆண்டு தொடக்கம் வருடம்தோரும் 20000 ற்கும் அதிகமான இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் இந்த தொகை 2009 ஆம் ஆண்டு 25 092 ஆகக் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் குடும்ப வன்முறை, மற்றும் திருமண பந்தத்தின் மூலமான அழுத்தங்கள் இவ்வாறான தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.