சிவனொளிபாத மலை யாத்திரை காலம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகம வெளியிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி வரையில் சிவனொளிபாத மலை யாத்திரை நடைமுறையில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
யாத்திரிகர்களுக்கு விசேட சுகாதார வழிகாட்டியை வெளியிடவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் யாத்திரிகர்கள் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி அட்டை அல்லது தடுப்பூசி அட்டையின் புகைப்பட நகல் வைத்திருக்க வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த யாத்திரையில் ஈடுபடுபவர்கள் சிவனொளிபாத மலை வளாகத்தில் தங்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.