நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய , சர்வதேச நாடுகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியில் பிரச்சிணைகளை எற்படுத்தக்கூடிய தீர்மானங்களை மேற்கொண்டு பசளை இறக்குமதிக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திக வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
காசில்ல நாட்டில் மேலும் ஒரு நிதிப்பற்றாக்குறையை இந்த சீன பசளைப் பிரச்சினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள ஒரு சந்தர்பத்தில் இவ்வாறான ஒரு சவாலை இந்த நாடு முகம் கொடுக்க நேரிடும் என்பதை ஊகிக்கக்கூடிய வல்லுனர்கள் நாட்டில் இருக்கும் சந்தர்பத்தில், அரசு என்ற ரீதியில் தங்களுக்குத் தோன்றுவதை செய்துகொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் செயன்முறைகளுக்கு உட்படாது இவ்வாறு பசளையை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை யார் எடுத்தார்கள் என்பது தான் முதல் பிரச்சினை என்றும், எமது அமைச்சரவை சீன பசளை நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு தீர்மானிப்பார்களாயின் இ அதனை இந்த தீர்மானத்தை எடுத்த நபர்களிடமிருந்து குறித்த பணத்தினை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நாட்டின் பொது மக்கள் கருதுவதாக அவர் தெரிவித்தார்.