கொவிட் தடுப்பு மத்திய நிலையத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வதா விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு கடமையை நிறைவேற்றுவதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பசுமை விவசாயத்திற்கான செயற்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத்தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொவிட் தடுப்பு மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சுகாதார அமைச்சின் கீழ் செயற்படவுள்ளது.