மியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவி ஆங் சான் சுகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வன்முறையை தூண்டுதல் மற்றும் கோவிட்-19 விதிகளை மீறியதற்காக ஆங் சான் சூகி கடந்த திங்களன்று குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
இந்நிலையில், 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.