கேஸ் கலவையின் விகிதத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பின் அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யும் அதிகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். த சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்தர்பங்களில் 10 மில்லியன் ரூபா தொடக்கம் 100 மில்லியன் வரையில் தண்டப்பணமொன்றை வசூலிக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.
கேஸ் தொடர்பான தரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தரக்கட்டுப்பாட்டு பணியகத்திலிருந்து விலக்கி மற்றுமொரு அதிகாரசபைக்கு வழங்கியது சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு சமையல் உரிவாயுவின் கலவையில் இருக்க வேண்டிய வீதம் தொடர்பில் சரியான நிர்ணயமொன்று இல்லாதது கவணிக்க வேண்டிய மிக முக்கிய காரணி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஜனாதிபதி விசேட குழுவோடு தற்போது கலந்துறையாடி கேஸ் பாவனையில் சில நிர்ணயங்களை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.