கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“தாலிபன்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பதற்காக தாலிபான்களை நாங்கள் அங்கீகரிப்பதாக பொருளாகாது” என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பின்பு ஆப்கானிஸ்தானில் நடந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு மறுநாள் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடரவுள்ளது.