Home LOCAL சைப்பிரஸ் மீதான ட்ரோன் தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்படவில்லை

சைப்பிரஸ் மீதான ட்ரோன் தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்படவில்லை

0
சைப்பிரஸ் மீதான ட்ரோன் தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்படவில்லை

சைப்பிரஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானம், ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி,, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

இருப்பினும், குறித்த ட்ரோன் யாரால் ஏவப்பட்டது என்பது குறித்த தகவல்களை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இதுவரை வெளியிடவில்லை.

கடந்த 2ஆம் திகதி, “ஷாஹெட்” வகையைச் சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று, அக்ரோட்டிரி  பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்தச் சம்பவத்தினால் சொத்துக்களுக்குச் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சைப்பிரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தப் போர்ச் சூழலில் சைப்பிரஸ் எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் பங்காளியாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்ரோட்டிரி தளத்தில் தங்கியுள்ள இராணுவத்தினரைப் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து படைத்தளத்தைப் பாதுகாப்பதற்காக ரோயல் கடற்படையின் வைல்ட்கேட் ஹெலிகாப்டர் வரும் நாட்களில் சைப்பிரஸிற்கு வருகை தரும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here