சட்டமா அதிபர் திணைக்களம் ரத்துச் செய்யப்படாது

சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகம் நிறுவப்படும் போது சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் ரத்துச் செய்யப்படாது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, ​​நீதி வழங்கும் பணியில் சட்டமா அதிபர் திணைக்களத்தை விட திறம்பட சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவை இதில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்று நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here