குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய எதுன்கஹகொடுவ முஸ்லீம் மத்திய கல்லூரியின் ஊடகப் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எம்.ஆர்.எம் ரிப்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விக்கு பிரதம அதீதியாக ஜே.எம் மீடியா நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலைக் காலங்களில் கல்விப் பணியோடு சேர்த்து இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவது வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் எனவும் தீய செயற்பாடுகளுக்கு மாணவர்கள் செல்வதில் இருந்து தடுக்கக் கூடிய நிலை காணப்படுவதாகவும் சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் தெரிவித்தார்.
மாணவர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி பாடசாலை ஊடகப் பிரிவை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டதோடு தலைமைத்துவ பண்புகள் மற்றும் ஊடகத்தின் முக்கியத்துவம் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 200 ற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகத்துறையில் சாதிக்க கூடிய மாணவர்களை உருவாக்கும் நோக்கில் எதுன்கஹகொடுவ முஸ்லீம் மத்திய கல்லூரியின் ஊடகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.