இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்  பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்,  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு 5 நாட்கள் துக்க தினத்தை அனுசரிக்க ஈரான் நாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பல நாடுகளில் துக்க தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here