இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) பிற்பகல் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எதிர்வரும் தேர்தலுக்கு முன்வர அனுமதிக்கப் போவதில்லை எனவும், தனது அச்சுறுத்தலை புறக்கணித்தால் கொலை செய்துவிடுவேன் எனவும் தொலைபேசியில் அச்சுறுத்திய நபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சரின் முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஹம்பரண பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட்டு பின்னர் எஞ்சிய தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here