ஐ.சி.சியின் புதிய தீர்மானம் அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது

2024 T20 உலகக் கிண்ண இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது என்று Cric Bus இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டியில் மழை குறுக்கிட்டால் 4 மணி நேரம் மட்டும் கூடுதல் நேரமாக வழங்க ஐசிசி மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண  கிரிக்கெட் போட்டி ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டி தொடங்கும் முன், மழை, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தடையாக இருந்தால் மேலதிக நாட்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட்டாலும், இரண்டாவது அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்பட வேண்டுமென்றால், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வெற்றி பெற்ற அணிக்கு விளையாடுவதற்கு இன்னும் 24 மணித்தியாலத்திற்கு குறைவான காலமே இருக்கும்.

இதன் காரணமாக இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு மேலதிக நாள் வழங்காமல் 4 மணி நேரம் மட்டும் கூடுதலாக வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here