Home LOCAL லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவர் சிக்கினார்

லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவர் சிக்கினார்

0
லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவர் சிக்கினார்

வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 16 இலட்சம் ரூபாவிற்கு மேல் பண மோசடி செய்த நபர் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1,619,000 ரூபாவை ஏமாற்றியுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை – கல்துடாவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here