Home LOCAL இத்தாலியில் இருந்து 6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் இலங்கைக்கு!

இத்தாலியில் இருந்து 6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் இலங்கைக்கு!

0
இத்தாலியில் இருந்து 6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் இலங்கைக்கு!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியில், போதைப்பொருள் இருந்ததை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

உணவாக அறிவிக்கப்பட்ட அந்த பொதியில் 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்கத்திலிருந்து பொதியை அகற்ற வந்த முகவர் ஒருவர் அங்கு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here