டி20 உலகக் கிண்ண தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியை கண்டது. அதற்கு அடுத்த சர்வதேச தொடராக ஜூன் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை டி20 உலக கிண்ண நடைபெற இருக்கிறது.
இந்த ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் காலிறுதி ஆட்டத்துக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்நிலையில் இங்கிலாந்து டி20 அணிக்கு ஆலோசகர் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ அல்லது பொல்லார்ட் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இவரால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது. பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று கருதப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. வீரராக கலக்கி வந்த இவர் பயிற்சியிலும் தற்போது கலக்கி வருகிறார். ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.