ஆசிய கிண்ணம் பங்களாதேஷ் அணிக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியே பங்களாதேஷ் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக Ashiqur Rahman Shibli, 149 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 129 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பாக Ayman Ahamed 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியால் 24 ஓவர்கள் 5 பந்துகளில் 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் Rohanat Doullah Borson மற்றும் Maruf Mridha ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here