சீனா இலங்கை பட்டுப்பாதை திட்டத்தின் ஊடாக இலங்கை அரசு அடைந்து கொண்ட நன்மைகள் மற்றும் இதன் விளைவுகள் என்ன என்பது தொடர்பான மாபெரும் கலந்துரையாடல் கல்முனை SLR Holiday மண்டபத்தில் (10) அன்று அதற்கான Asia Progress Forum அமைப்பின் ஏற்பாட்டாளரும் பிரபல வர்த்தகர் மற்றும் சமூக சேவையாளர் மஹ்மூத் மாஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் கல்முனை மாநகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த அனைத்து இன மதங்களையும் சேர்ந்த இளம் கல்வியாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் முக்கியமான உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இந் நிகழ்வில் கலந்து கொண்டதோடு இந் நிகழ்வு காலை 9.00 ற்கு ஆரம்பித்து மதிய உணவுவோடு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

இந் நிகழ்வில் சீனாவின் உடைய பட்டுப்பாதை திட்டத்தின் ஊடாக இலங்கை பெற்றுக்கொண்ட திட்டங்கள் அவை எவ்வாறு பயன்படுகிறது இலங்கை பெற்று கொண்ட கடன்களின் அளவு சீனாவிலிருந்து இருந்து பெற்றுக்கொண்ட கடன்களின் அளவு தனி நபர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அளவு ஏனைய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட அளவுகள் போன்ற முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு அவர்களது திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் அந்த திட்டங்கள் தற்போது எவ்வாறு அமைந்திருக்கின்றது அதன் வெற்றி பாதை எப்படி அமைய வேண்டும் ஒரு நாட்டின் முன்னேற்றம் எப்படி அமைய வேண்டும் ஒரு நாட்டை முன்னேற்றுவது எவ்வாறு என்பது தொடர்பான பழ விடயங்கள் மற்றும் தொழினுட்பம் கல்வி விவசாயம் சுகாதாரம் சார்ந்த அனைத்து துறைகளையும் உள்வாங்கியதாக இந் நிகழ்வு இடம்பெற்றது.
ASM.ARHAM
JMMC/CMM/14/09
