Home LOCAL டெங்கு விழிப்புணர்வு தெருவெளி நாடகம்

டெங்கு விழிப்புணர்வு தெருவெளி நாடகம்

0
டெங்கு விழிப்புணர்வு தெருவெளி நாடகம்

அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் இன்று (06) அச்சுவேலியில் முன்னெடுக்கப்பட்டது.

ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் மக்கள் மத்தியில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த தெருவெளி நாடகம் அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது டெங்கு நோயை ஏற்படுத்தும் காரணிகள், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம் அத்துடன் யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பான விபரங்களும் அச்சுவேலி பகுதியில் அதிகரித்துள்ள டெங்கு நோய் தொடர்பான விவரங்களும் உள்ளடங்களாக குறித்த தெருவெளி ஆற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here