Home LOCAL கோழி இறைச்சி, முட்டை விலை குறையும் சாத்தியம்

கோழி இறைச்சி, முட்டை விலை குறையும் சாத்தியம்

0
கோழி இறைச்சி, முட்டை விலை குறையும் சாத்தியம்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி  மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் மேலும் குறையும் சாத்தியம் காணப்படுவதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகளின் விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் இந்நிலை மாறலாம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்

சிறு மற்றும் நடுத்தர கால்நடை உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here