Home LOCAL நாட்டின் நெருக்கடிக்கு ராஜபக்ஷகளே காரணம்! உயர் நீதிமன்றம் அதிரடி

நாட்டின் நெருக்கடிக்கு ராஜபக்ஷகளே காரணம்! உயர் நீதிமன்றம் அதிரடி

0
நாட்டின் நெருக்கடிக்கு ராஜபக்ஷகளே காரணம்! உயர் நீதிமன்றம் அதிரடி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிகல, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட குழுவினால் மக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த போதே ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here