அரசியலமைப்புக்கு அமைய 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பேராளர் மாநாட்டில் உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
