Home LOCAL சுடு நீர் கொதிகலனில் விழுந்து ஒருவர் பலி

சுடு நீர் கொதிகலனில் விழுந்து ஒருவர் பலி

0

சுடு நீர் கொதிகலனில் விழுந்து இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிபென்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த ஜே. ராஜ்பாய் என்ற 34 வயதானவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) அதிகாலை மீகம தர்கா நகரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சுடுநீர் கொதிகலனுக்குள் விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிபென்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here