அதிவுயர் விலைக்கு விற்பனையாகும் தேசிக்காய் l எவ்வளவு தெரியுமா?

0
1

இலங்கையில் தேசிக்காய்  ஒன்றின் விலை நேற்றைய தினத்தில் 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாத்தளை மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 58 ரூபாவாக காணப்பட்டுள்ளது.

அத்துடன், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தேசிக்காய் அருவடை குறைந்துள்ளமையை, விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என தெரிய வருகின்றது.

ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்றைய தினத்தில் 2000 கிலோகிராம் தேசிக்காய் மாத்திரமே கிடைத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here