கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட பின்னர் உயிரிழந்த நபரின் மரபணு மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நோயாளிக்கு வழங்கப்பட்ட amoxyclav என்ற நோய் எதிர்ப்பு மருந்தின் மாதிரிகளும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளின் பெறுபேறுகள் கிடைத்த பின்னரே மரணம் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெட்டுக்காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அண்மையில் தேசிய வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவருக்கு amoxyclav என்ற நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, குறித்த மருந்தின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தவும் சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.