ஹோமாகம மீகொடை நடுஹேன, ரந்திய உயன மற்றும் கரல் அமுஹேன ஆகிய பகுதிகளை இணைக்கும் வீதியொன்று துாண்களுடன் முட்கம்பி வேலி அமைத்து மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஹோமாகம பிரதேச சபையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 60 ஆண்டுகளாக இந்த வீதியை பயன்படுத்தி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் எந்தவொரு ஆவணத்திலும் அவ்வாறான வீதி குறித்து குறிப்பிடப்படவில்லை என ஹோமாகம பிரதேச சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.