Home LOCAL காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகின்றது

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகின்றது

0
காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகின்றது

மட்டக்களப்பு – காத்தான்குடி புராதன நூதனசாலையின் நிலைமை தற்போது உரிய பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கி காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு அன்றாடம் நாடு பூராகவும் தினமும் குறித்த நூதனசாலையை பெரும் எண்ணிக்கையிலான உள்ளுர் மற்றும் வெளியூர் மக்கள் பார்வையிட்டு உள்ளனர்.

இந்த பிரமாண்டமான நூதனசாலை 90% முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே அமைகிறதுடன் குறித்த நூதனசாலையை பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், வியபாரா முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது ‘வுளு’ செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் கலாசாரம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.

பல பழைமையான பொருட்களினையும் சில செயற்கையாக உருவாக்கப்பட்ட மாதிரி உருவமைப்புகளையும் காணக்கூடிய இந்நூதனசாலையின் அறிவித்தல் பலகைகள் சேதமடைந்து காணப்படுவதுடன் பார்வையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்தவொரு வழிகாட்டலும் இன்றி தான்தோன்றி தனமாக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் தற்போது காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் உள்ள மேற்படி நூதன சாலையை சில தினங்களுக்கு மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here