அஸ்​வெசும உள்ளிட்ட கொடுப்பனவுகள் அடுத்த வாரம் முதல்

0
3

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் குறித்த மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளரின் தலைமையில் அந்தந்த அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வருட வரவு செலவுத் திட்டம் சவாலான ஒன்றாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விசேட தேவையுடையவர்கள், முதியோர் உதவித்தொகை, சிறுநீரக நோய் மானியம், சமுர்த்தி, மற்றும் அஸ்​வெசும உள்ளிட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அஸ்​வெசும கொடுப்பனவுகளுக்காக 5.4 பில்லியன் ரூபாவும், விசேட தேவையுடையவர்கள், முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் 1.8 பில்லியன் ரூபாவும், சமுர்த்தி கொடுப்பனவு கிடைத்து அஸ்​வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாமல் மேன்முறையீடு செய்துள்ளவர்களுக்கு 1.2 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here