தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி, 84,664 குடும்பங்களைச் சேர்ந்த 291,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வறட்சியான காலநிலையினால் வட மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 23,688 குடும்பங்களைச் சேர்ந்த 75,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 18,981 குடும்பங்களைச் சேர்ந்த 63,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சப்ரகமுவ மாகாணத்தில் 13,705 குடும்பங்களைச் சேர்ந்த 55,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் வடமேல் மாகாணத்தில் 7,143 குடும்பங்களைச் சேர்ந்த 23,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது