Home LOCAL ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை பிரயோகம்

ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை பிரயோகம்

0
ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருலப்பனையில் பகுதியிலேயே குறித்த நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(செய்திப் பின்னணி)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று (10) நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் இந்திரஜித், அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் அழைப்பாளர் வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 10 பேருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போராட்டக்காரர்கள் மருதானை பொலிஸ் பிரிவில் டீன்ஸ் வீதி, மருதானை சந்தி, டி.பி.ஜயா மாவத்தை, தொழில்நுட்ப சந்தி, ஒல்கொட் மாவத்தை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை (11) நண்பகல் 12 மணி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here