கேகாலை – அவிசாவளை வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

0
1

கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு கேகாலை அவிசாவளை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி ஆலயத்திற்கு அருகாமையில் வருடாந்த ஊர்வலம் இன்று (05) இரவு ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி வூ வெந்தல விகாரை வரை கேகாலை அவிசாவளை வீதியூடாக வீதிஉலா வரவுள்ளது.

எனவே, இன்று இரவு 09.00 மணி முதல் நாளை (06) அதிகாலை 03.00 மணி வரை, ஊர்வலத்தைக் காண வருபவர்களாலும், தினசரி வீதியில் பயணிக்கும் வாகனங்களாலும், கேகாலை அவிசாவளை வீதியில் சில வீதித் தடைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதால்,  அந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்று வழிகள்,

அவிசாவளையிலிருந்து கேகாலை நோக்கி வரும் வாகனங்கள் தல்துவ சந்தியிலிருந்து மெதகொட வீதியில் ருவன்வெல்லயிலிருந்து கேகாலை நோக்கி பயணிக்க முடியும்.

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தல்துவ சந்தியிலிருந்து மெதகொட வீதியில் ருவன்வெல்ல, பனாப்பிட்டி, பருஸ்ஸல்ல ஊடாக யட்டியந்தோட்டை, ஹட்டன் வரை பயணிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here