வட்டவலை பஸ் விபத்து l 12 பேர் காயம்

0
1

ஹட்டன் – வட்டவலை பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here