சிறுநீரகங்கள் அகற்றப்பட்ட சிறுவன் மரணம்! வைத்தியசாலை தரப்பில் கூறுவது என்ன?

0
1

சிறுநீரகங்கள் அகற்றப்பட்டதால் உயிரிழந்த முஹம்­மது ஹம்தினுக்கு ஏற்­பட்ட நிலை தொடர்பில் விசா­ர­ணை நடத்த உத்­த­ர­வி­டப்பட்­டுள்­ள­தாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் ஜீ. விஜ­ய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் தெரி­விக்­கையில்,

“செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்­துடன் மற்­றைய சிறு­நீ­ரகம் பிறப்­பி­லேயே ஒட்­டி­யி­ருந்­த­தா­லேயே இரு சிறு­நீ­ர­கமும் செய­லிழந்­தி­ருக்கும் என நான் எண்­ணு­கிறேன். அதன் கார­ண­மா­கவே செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்தை அகற்றும்போது மற்­றைய சிறு­நீ­ர­கமும் நீக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விடயத்தில் சிறுவனின் பெற்­றோ­ரி­ட­மி­ருந்து எனக்கு எவ்­வித முறைப்­பாடும் கிடைக்­க­வில்லை.

மேலும், சத்­திர சிகிச்சை மேற்­கொண்டு 7 மாதங்கள் கடந்­துள்­ளன.

இந்­நி­லையில், இந்த சத்­திர சிகிச்சை மேற்கொண்ட விசேட சத்­திர சிகிச்சை நிபுணர் தற்­போது நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ளார்.

இருப்­பினும், அதன் பின்னர் சிகிச்சைகளை மேற்­கொண்ட வைத்­தி­யர்­க­ளிடம் வாக்­கு­மூ­லங்­களை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு நான் பிரதிப் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன் என்றார்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here