நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால் அத்தியாவசிய மருந்துகளுக்கு பெரும் தடுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், இலங்கையின் பிரபல செய்தியாளராக கடமையாற்றி வந்த மைக்கேல் அருள்ஜேசு நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு ஒரு இடத்திலேயே முடங்கிவிட்டார்.
செய்தியாளர், செய்தி வாசிப்பாளர், பல்வேறு திறமைகளை தம்வசம் வைத்திருந்த அருள்ஜேசு, இன்று உரிய முறையில் பேச்சு வராமல், நடக்க முடியாமல் பண்டாரவளையில் வாழ்ந்து வருகின்றார்.
இவரை கவனித்துக்கொள்வதற்காக இவரது மனைவி ஆசிரியை தொழிலை விட்டுவிட்டு அருள்ஜேசுவை கவனித்துக்கொள்கின்றார்.
இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுடைய கல்விக்கு பணம் இல்லாமல் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இவருக்கு ஒரு மாதத்திற்கான மருந்து செலவு மட்டும் 45,000 என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இறக்குவானை பகுதியில் 15 வயதான கார்த்திகேயன் நிரோஷா என்ற மாணவி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். நாட்டில் ஏற்படும் மருந்து தட்டுப்பாடே தனது தங்கை மரணத்திற்கு காரணம் என நிரோஷாவின் அக்கா குறிப்பிடுகின்றார்.
இதேவேளை குறித்த பகுதியில் டில்ருக்ஷியும் தற்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மருந்து தட்டுப்பாடானது இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை நேரடியாக பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
