வியத்மக அமைப்பு ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வந்து அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஷா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உரையாற்றியதாவது,
வியத்மக அமைப்பின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வந்து அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய நாலக கொடஹேவா இன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
தவறான ஆலோசனைகளை கேட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பாரிய அரசியல் நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும்.
பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா கம்பஹா மாவட்ட மக்களை தவறாக வழிநடத்தி பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். நேர்ந்தது என்ன கம்பஹா மக்கள் ஒட்டுமொத்த மக்களையும் வெறுக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.
இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா வியத்மக அமைப்பு ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை நாங்கள் கொண்டு வந்தோம்.
அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகுவதற்கு முன்னர் ஆலோசனை வழங்கினோம். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாங்கள் ஆலோசனை வழங்கவில்லை என்றார்.