இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
அதன் அடிப்படையில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 328 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அத்துடன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 365 ரூபாய் ஆகும்.
அதேநேரம் சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் அதிகரித்து ரூபாய் 346 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைந்து 308 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைந்து 236 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
