மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது 15 நிறுவனங்களுக்கு மின்சார சபையை ஒதுக்கீடு செய்வதற்கான யோசனை தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எங்களுக்குத் தகவல் உள்ளது.
இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரசபையை வழங்குவதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இல்லையென்றால், 21ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் மின்சார சபை அலுவலகங்களை விட்டு வெளியேறி விஹாரமஹாதேவி பூங்காவில் திரளவுள்ளதாக தெரிவித்தார்.
