மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

0
5

இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 – 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான பருவச் சீட்டுக் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய கட்டண அதிகரிப்புக்கு அமையவே, பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களை இல்லாது செய்வதா? அல்லது தொடர்வதா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here