Home LOCAL அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவி குறித்த அறிவிப்பு!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவி குறித்த அறிவிப்பு!

0
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவி குறித்த அறிவிப்பு!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் குறைக்கப்படாமல் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறிப்பிட்ட சிலருக்கு அரசினால் வழங்கப்படும் சிறுநீரக உதவி, முதியோர் உதவி உள்ளிட்ட பொது உதவிகள் குறைக்கப்படாமல் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நட்டஈட்டுப் பலன்களை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் இரண்டாவது உப ஆவணத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here