ரணிலின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் சந்தேகநபரானார் ஸ்ரீ ரங்கா

0
1

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை எரித்த சம்பவத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயரிட்டுள்ளனர்.

இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here