பாரிய மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் இலங்கையில் அதிரடி கைது

0
1

பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றிய சீன பிரஜைகள் 39 பேர் அடங்கிய குழுவொன்று அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்து இந்த இணைய மோசடிகளில் ஈடுபட்டு பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தூதரகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சீன பிரஜைகளை நேற்று (1) கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here